வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-05 19:50 GMT

களக்காடு:

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனம், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதல் நடந்தது. திருவிழாவின் 5-ம் நாளன்று கருடசேவையும், 7-ம் நாளன்று வரதராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 8-ம் நாளன்று பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி இரவில் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.

களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்