வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரமங்கலத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-09-03 18:30 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, விக்கிரமங்கலம் கிராம மக்கள் அந்த கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். பின்னர் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

அதன்படி கடந்த 1-ந் தேதி அனுக்ஞை, ரக்ஷா பந்தனம், பூர்ணாஹுதி, வேத பாராயணம் ஆகியவை நடைபெற்றது. 2-ந் தேதி மகா சாந்தி ஹோமத்துடன், தீபாராதனை, வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தது. நேற்று காலை பஞ்ச சுத்த ஹோமம், பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓத கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்