வரதநல்லூர் ஊராட்சி கிராமசபை கூட்டம்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்
வரதநல்லூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.
பவானி
வரதநல்லூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.
கோரிக்கை மனுக்கள்
குடியரசு தினத்தையொட்டி நேற்று பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வரதநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் அங்குள்ள ரேஷன் கடை வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வரதநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமை தாங்கினார். திட்ட அறிக்கையினை ஊராட்சியின் செயலாளர் அம்பிகா வடிவேல் வாசித்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அவர் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்தல், அந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை தடுக்க கொசு ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விவாதங்கள்
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், "அனைவருக்கும் வீடு" குறித்த கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக பணிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முதலானவை குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாத்மா காந்தி வேலை உறுதி திட்ட உதவி இயக்குனர் சூர்யா, வேளாண்மை செயற்பொறியாளர்கள் சின்னசாமி, விஸ்வநாதன், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் சதீஷ்குமார், வரதநல்லூர் ஊராட்சி மன்ற பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் சுமதி நன்றி கூறினார்.