வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில்கை கழுவும் தினம் கொண்டாட்டம்

வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-22 19:11 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதவிகாஸ் பப்ளிக் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் கைகழுவும் தினமானது கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வரதவிகாஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் தீபா பீட்டர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மேலமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கை கழுவுவது குறித்தும், தன் சுத்தத்தினை பற்றியும் உணவு பழக்க வழக்கத்தினை பற்றியும் மாணவர்களுடன் உரையாற்றினார். சுகாதார ஆய்வாளர்கள், முருகேசன், அன்பழகன் ஆகியோர் மாணவர்களிடம் எவ்வாறு கைகளை கழுவ வேண்டும், கை கழுவும் முறைகளையும் செயல் விளக்கத்துடனும், போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றியும் எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணன், பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜூனியர் ரெட்கிராஸ் மண்டல அலுவலர் ஆனந்தகுமார் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்