வன்னியர் இடஒதுக்கீடு: தமிழக அரசு கடமையை செய்ய தவறுகிறது - டாக்டர் ராமதாஸ்

10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு மறுக்கிறது என்று ராமதாஸ் கூறினார்.

Update: 2024-02-20 18:49 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழைக்கும் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு. தமிழ்நாட்டில் இல்லை, மராட்டியத்தில் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மராட்டிய அரசு.

அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி. ஆனால், சுப்ரீம் கோர்ட்டே வழங்க வலியுறுத்தியும் 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு. கடமையை செய்ய தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். இப்போது சொல்லுங்கள். இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்