வஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பழனி அருகே வஞ்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-08-24 16:17 GMT

பழனி அருகே பெரியமொட்டனூத்து பகுதியில் வஞ்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு கோவிலில் யாகபூஜை, சூர்யபூஜை, துவாரபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, கலசபூஜை ஆகியவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விநாயகர், வஞ்சியம்மன், செல்லாண்டியம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்