வந்தவாசி நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் எச்.ஜலால் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பி.கே.சரவணன், துணைத்தலைவர் க.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2, 12, 22, 23 ஆகிய வார்டு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. நகரில் குப்பைகளை சரிவர அள்ளுவதில்லை. வந்தவாசி நகரின் பிரதான கழிவுநீர் கால்வாயான நாராசந்து கால்வாயை தூர் வாருவதேயில்லை என்று புகார்கள் தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.
நகரமன்ற உறுப்பினர்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரமன்ற தலைவர் எச்.ஜலால் கூறினார்.