வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.;

Update:2023-01-17 21:55 IST

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர். மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரை, பூங்காக்களுக்கு சென்று உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

91 ஆயிரம் பெரியவர்களும் 9 ஆயிரம் குழந்தைகளும் வருகை தந்ததாக பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்