வேன் திருட்டு
தஞ்சை அருகே வேனை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சையை அடுத்த நீலகிரி அருள் பிரகாசம் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 43). இவர் தனக்கு சொந்தமான வேனை மருத்துவக் கல்லூரி சாலை 4-வது கேட் அருகே நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. யாரே வேனை திருடி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வன் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.