சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - பெண் பலி

ஊட்டி- கல்லட்டி மலை பாதையில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-07-02 19:40 GMT

ஊட்டி,

சென்னையை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் 18 பேர் ஒரு டெம்போ வேனில் மசினகுடிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நேற்று இரவு 9.30 அளவில் கல்லட்டி மலை பாதையில் சென்றுள்ளனர். அப்போது கல்லட்டி மலை பாதையில் டெம்போ வேன் 15வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது வேன் பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் பயணம் செய்த டிரைவர் உட்பட 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் மீட்டு அவர்களை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்