விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.;

Update: 2023-08-30 18:45 GMT

விழுப்புரம் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 9 பேர் நேற்று திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்த வேனை கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை நத்தம் பகுதியை சேர்ந்த தனவந்தன் (வயது 24) என்பவர் ஓட்டினார். இந்த வேன், விழுப்புரம் அருகே பிடாகம் பெட்ரோல் நிலையம் அருகில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி நடுரோட்டிலேயே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 5 பேர் லேசான காயமடைந்தனர். உடனே அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்தினால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான வேனை சாலையோரமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்