வேன்-லாரி மோதல்; டிரைவர் பலி

புவனகிரி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-02-11 18:53 GMT

புவனகிரி, 

சேலம் மாவட்டம் முருகன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மகன் சக்திவேலன் (வயது 41). டிரைவர். இவர் உறவினர்களுடன் ஒரு வேனில் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். வேனை சக்திவேலன் ஓட்டினார். புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் மெயின் ரோட்டில் சென்றபோது புவனகிரியில் இருந்து நெய்வேலி நோக்கி சென்ற லாரியும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சக்திவேலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் வேனில் வந்த சேலத்தை சேர்ந்த ராஜா, கார்த்திக், வேலன், இந்திரஜித், அமேசான், காசி, பச்சமுத்து ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது பின்னால் பஸ்சில் வந்த சக்திவேலனின் உறவினர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்