டிராக்டர் மீது வேன் மோதல்; 12 பேர் காயம்

கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது வேன் மோதியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-11-27 13:40 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கும் திருமண நிச்சயம் செய்வதற்காக வேனில் 10-க்கும் மேற்பட்டோர் கீழ்பென்னாத்தூர் வழியாக செஞ்சிக்கு சென்றனர். நாராயணசாமி என்பவர் வேனை ஓட்டிச் சென்றார்.

கருங்காலி குப்பம் பகுதியில் சென்ற போது திடீரென எதிரில் வந்த டிராக்டர் மீது வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் நாராயணசாமி, சிறுநாத்தூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் திருநாவுக்கரசு மற்றும் வேனில் பயணம் செய்த விண்ணரசி, லூர்துமேரி, ரோஸ்மேரி உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்