வேன் மோதி வாலிபர் பலி

வெம்பக்கோட்டை அருகே வேன் மோதி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-09 19:23 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே வேன் மோதி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாலிபர் பலி

வெம்பக்கோட்டை அருகே உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நிமல் (வயது 19). இவருடைய நண்பர்கள் சுதர்சன் (20), நாகூர்கனி (20). இவர்கள் இருசக்கர வாகனத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றனர். அப்போது சிவகாசியில் இருந்து திருவேங்கடம் வந்த வேன் வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே வந்த போது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நிமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

இதில் படுகாயம் அடைந்த சுதர்சன், நாகூர் கனி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வேன் டிரைவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குலசேகரன்கோட்டையை சேர்ந்த வேல்முருகனை (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்