மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி என்ஜினீயர் பலி

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி என்ஜினீயர் பலியானார்.

Update: 2023-08-24 18:30 GMT

மோட்டார் சைக்கிள் மீது மோதல்

பெரம்பலூர் அருகே குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். மணிகண்டனுக்கு கங்காதேவி என்ற மனைவியும், மதிவாணன் (வயது 27) என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் இருந்தனர். சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த மதிவாணன் நேற்று இரவு தனது தாயிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிவிட்டு ஈச்சம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அவர் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஈச்சம்பட்டியில் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

டிரைவர் கைது

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதிவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான விழுப்புரம் மாவட்டம், வளவனூர் தாலுகா, வடக்கு ஊரல், கொட்டாய் தெருவை சேர்ந்தவர் ரமேசை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்