வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்

அம்மாப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-05-12 20:24 GMT

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் காயமடைந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற போது நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

திருச்செந்தூருக்கு சென்றனர்

மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று 16 பேர் கொண்ட குழுவினர் ஒரு வேனில் சென்றனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சாலியமங்கலம் பகுதியில், தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்தனர்.

சிகிச்சை

உடனே சம்பவ இடத்தில் திரண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் அம்மாப்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்