வள்ளியூர் அரசு பள்ளியில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு

வள்ளியூர் அரசு பள்ளியில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு

Update: 2022-08-10 21:00 GMT

வள்ளியூர்:

தமிழகத்தில் `நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் உயர் தொழிற்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாம்பன்குளம், குமாரபுதுக்குடியிருப்பு, வள்ளியூர் கீழ்தெரு, அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான அப்பாவு தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். அப்போது வள்ளியூர் கலையரங்கு தெருவில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக தயார் செய்த மதிய உணவை ஆய்வு செய்தார். பின்னர் சத்துணவை சாப்பிட்டு ருசி பார்த்தார்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்