கொங்கு நாடு கலைக்குழு சார்பில் வள்ளி-கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
கொங்கு நாடு கலைக்குழு சார்பில் வள்ளி-கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
பெருந்துறை
பெருந்துறை அருகே திங்களூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு நாடு கலைக்குழுவின் சார்பில் கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி-கும்மி ஆட்டம் அரங்கேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியை கொங்குநாடு கலைக்குழு தலைவரும், கொ.ம.தே.க. மாநில பொருளாளருமான கே.கே.சி.பாலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெருந்துறை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள், சிறுவர்-சிறுமிகள் என 500-க்கும் மேற்பட்டோர் மின் ஒளி வெளிச்சத்தில் இந்த வள்ளி-கும்மி ஆட்டத்தில் பங்கேற்று, பாடல் இசைக்கேற்ப கொங்கு பாரம்பரிய நடனங்களை ஆடினர்.
காசுக்காரன்பாளையம், நல்லாம்பட்டி, திங்களூர், பெத்தாம்பாளையம், பெருந்துறை, விஜயமங்கலம், காஞ்சிக்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து வள்ளி-கும்மி ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.