தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டியில் மவுனானந்தர் கும்மி கலை குழுவினர் சார்பில் வள்ளிகும்மியாட்ட 6-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன், வள்ளி முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடனம் ஆடினர். இதைக்காண தாராபுரம், மணக்கடவு, தொப்பம்பட்டி, கொங்கூர், மீனாட்சிபுரம், வரப்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து வள்ளி கும்மியாட்டத்தை கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கு வள்ளி கும்மி குழு ஆசிரியர் வரப்பாளையம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இணை ஆசிரியர்கள் கனகராஜ், ஈஸ்வரன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.