வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் தேசிய சட்ட தினம்

வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-25 18:45 GMT

வல்லநாடு:

வல்லநாடு (கஸ்பா) அருகே உள்ள துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் நேற்று தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தலைவர் மற்றும் துணை தலைவர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் முகம்மது வரவேற்றார். நெல்லை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் மற்றும் டி.காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட முதலாம் நீதித்துறை நடுவர் மன்றத்தின் நீதிபதி திரிவேணி கலந்துகொண்டு "அரசியலமைப்பு சட்டமும், பெண்களின் முன்னேற்றமும்" பற்றிய தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் சட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்