வல்லம் ஒன்றியக்குழு கூட்டம்

வல்லம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-06-28 18:45 GMT

செஞ்சி:

வல்லம் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த தாஸ், சிலம்பு செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலைகள், சிறுபாலங்கள், குடிநீர் வசதி அமைத்தல் உள்ளிட்ட 21 வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் மலர்விழி அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் இந்துமதி, அமிர்தம், கோமதி, பிரபாகரன், பத்மநாபன், சிலம்பரசி, விஜயா, பிரேம் சாந்தி, கம்சலா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், செல்வகுமார், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்