விழுப்புரத்தில்வள்ளலார் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் வள்ளலார் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-19 18:45 GMT


விழுப்புரம் மாவட்ட வள்ளலார் தொண்டர்களின் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தலைமை சன்மார்க்க சங்க துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட சன்மார்க்க சங்க பொருளாளர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க வலியுறுத்தியும், வடலூரில் வள்ளலாருக்கு உரிய இடங்களையும், தெய்வநிலையத்தையும் தமிழக அரசே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும், வள்ளலார்-200 முப்பெரும் விழா அழைப்பிதழ்களில் வள்ளலாரின் கொள்கைகள் இடம்பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் புதுச்சேரி சன்மார்க்க சங்க நிர்வாகி அருணாசலம், திண்டிவனம் தருமசாலை நிர்வாகி ராஜேந்திர பிரசாத், மாவட்ட சன்மார்க்க சங்க பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் வெங்கடேசன், உலகநாதன், திவ்யநாதன் மற்றும் வள்ளலார் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்