வள்ளலார் முப்பெரும் விழா

வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2023-07-02 20:18 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டலம், விருதுநகர் மாவட்டம் சார்பில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி, நகை கண்காணிப்பு அலுவலர் பொன் சாமிநாதன், மதுரை உதவி ஆணையர் நாராயணன், தலைமை எழுத்தர் ராஜபாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆய்வாளர் முத்து மணிகண்டன், ராஜபாளையம் ஆய்வாளர் முருகானந்தன், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆய்வாளர் கண்ணன், விருதுநகர் செயல் அலுவலர் லட்சுமணன், திருத்தங்கல் செயல் அலுவலர் தேவி, சாத்தூர் செயல் அலுவலர் சுபாஷினி, மடவார் வளாகம் செயல் அலுவலர் ஜவகர் மற்றும் வள்ளலார் வழிவந்த அடியார்கள் கலந்து கொண்டு வள்ளலார் வரலாறு குறித்தும், சன்மார்க்க நெறிமுறை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் சிறப்புரையாற்றினர். முன்னதாக சன்மார்க்க நெறிமுறையை பற்றி நான்கு ரத வீதியில் பேரணி நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் அறநிலைய துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீனாட்சி சொக்கநாதர் கோவில் செயல் அலுவலர் தேவி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்