மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டையை அடுத்துள்ள மில்லத்துபட்டியை சேர்ந்தவர் வினோத் (வயது 22). இவர், 17 வயது பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.