வாலிபர் பலி

கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-28 19:08 GMT

விருதுநகர், 

விருதுநகர் கலைஞர் நகரை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (வயது21), சந்தோஷ் (19), முனியசாமி (24). கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சத்திரரெட்டியபட்டி விலக்கு அருகே சாலையை கடந்தனர். அப்போது மதுரையிலிருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் காரில் வந்த கோவில்பட்டி சாலைப்புதூரை சேர்ந்த பிரவீன் குமார் (30) என்பவரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து ்தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சந்தோஷ் மற்றும் பிரவீன் குமாரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். அஜித் குமார் மற்றும் முனியசாமி ஆகியோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதுபற்றி பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்