கடத்தூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது

கடத்தூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-08 17:32 GMT

மொரப்பூர்:

கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் கேத்துரெட்டிபட்டி-மோட்டாங்குறிச்சி ரெயில்வே பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் ைசக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக கேத்து ரெட்டிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது சாராயம் காய்ச்ச பேரலில் ஊறல் போட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் அழித்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்