வைகுண்ட ஏகாதசி திருநாள்; கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;
தஞ்சாவூர்,
108 வைணவத் தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாகவும் விளங்குகிறது. நித்திய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என்று இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இந்த ஆலயமே வைகுண்டமாக கருதப்படுவதால், இங்கு தனியாக சொர்க்கவாசல் இல்லை.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் அதிகாலை தொடங்கி இடைவிடாமல் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 11 மணியை கடந்தும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.