வைகோ-எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு
வைகோ-எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு
கோவை
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சிறை வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த செக்கு இருக்கும் இடத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது எதிரே வந்த வைகோவை, எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். பின்னர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு கைகுலுக்கிக்கொண்டனர். எதிர்க்கட்சி கொறடாவும், ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் திடீரென சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.