பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய வைகோ

கலிங்கப்பட்டியி்ல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-09 18:45 GMT

திருவேங்கடம்:

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கலிங்கப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடையில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமொழி சந்துரு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குருவிகுளம் ஒன்றிய கவுன்சிலர் அருள்குமார், கூட்டுறவு பண்டகசாலை சங்க துணைத்தலைவர் நிறைபாண்டி கோனார், பண்டகசாலை நிர்வாகி குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்