விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாக வழிபாடு

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாக வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-06-02 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்து வெள்ளி கவசத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம், கலசாபிஷேகம், திரவிய அபிஷேகம், சங்காபிஷேகம், சண்முகார்ச்சனை, ஆறு தீபாராதனைகள் நடைபெற்றது.

வைகாசி விசாகம் என்பதால் நேற்று கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து நெய் தீபமேற்றி வழிபட்டு சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாசலம் வேடப்பர் கோவில், ஆதி கொளஞ்சியப்பர் கோவில், முதனை செம்புலிங்க அய்யனார் கோவில், விருத்தகிரிகுப்பம், ஆலிச்சிக்குடி கிராமங்களில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில் என்று பல்வேறு முருகன் கோவில்களில் வைகாசி விசாக வழிபாடுகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்