சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
கடையம் அருகே மயிலப்பபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.;
கடையம்:
கடையம் அருகே மயிலப்பபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு உச்சி கால பூஜை, குழந்தைகளுக்கான ஆன்மிக நடன நிகழ்ச்சி, வேல் புஷ்பாஞ்சலி, திருக்கல்யாண வைபோகம், 1251 திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றது. நேற்று பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.