பல்லவனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
பல்லவனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது
திருவெண்காடு
பூம்புகார் அருகே உள்ள பல்லவனம் பகுதியில் பல்லவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகான் பட்டினத்தாருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி காவிரி கரையில் இருந்து பக்தர்கள் வேல் கொண்டு வந்தனர். இதனையடுத்து சாமிக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், விழாக்குழு தலைவர் மிலிட்டரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.