முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.;
கடையம்:
கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆனைமுக வடிவில் உள்ள மலைக்குகையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மலையடிவாரத்தில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவில் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மயிலப்பபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.