சயனபுரம் கொளக்கியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
சயனபுரம் கொளக்கியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தில் உள்ள கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோவிலில் நேற்று வைகாசி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாட்டனர். மாலை 3 மணியளவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.