பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்
பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது.;
புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. மேலும் சாமி அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் மாலை 5 மணிக்கு சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. வருகிற 10-ந் தேதி ஊஞ்சல் சேவையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.