வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகள் கல்வி சுற்றுலா

வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகள் கல்வி சுற்றுலா சென்றனர்.

Update: 2022-11-28 18:45 GMT

தூத்துக்குடி வட்டார மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டறிதல் சுற்றுலாவாக விவசாயிகள் வாகைக்குளம் வேளாண்மை அறிவியல் மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் மண்புழு உரம் தயாரித்தல், கோழி வளர்ப்பு, அசோலா பசுந்தீவன உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு வழிமுறைகள் குறித்து பண்ணை மேலாளர் தாமோதரன் எடுத்துக் கூறினார். வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து மனையியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் சுமதி விளக்கினார். மேலும் இயற்கை முறையில் தாவர பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கான முறைகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுடலைமணி விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் பகவதிகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்