மதுரை அருகே துணிகரம் - பின்தொடர்ந்து வந்து நகை பறித்த கும்பலால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் - படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

பின்தொடர்ந்து வந்து நகை பறித்த கும்பலால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் காயம் அடைந்தார்.

Update: 2023-05-16 20:56 GMT

அலங்காநல்லூர், 

பின்தொடர்ந்து வந்து நகை பறித்த கும்பலால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் காயம் அடைந்தார்.

மகனுடன் வந்த பெண்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி பானுமதி (வயது 51). ராஜேந்திரன் இறந்துவிட்டார்.

நேற்று முன்தினம் பானுமதி தனது மகன் கார்த்திக்குடன்(24) மோட்டார்சைக்கிளில் கூடல்நகர் சந்தையில் காய்கறிகள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.

நகை பறிப்பு

பொதும்பு அருகே வந்தபோது 20 வயது மதிக்கத்தக்க 3 பேர், மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென பானுமதி, கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதில் நிலைதடுமாறிய பானுமதி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்