வடாரண்யேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

Update: 2023-04-04 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார்குழலி அம்பிகை உடனாய வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சந்திர பிறை வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம் வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், நாக வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா மற்றும் திருக்கல்யாண வைபவம், தேர் வடம் பிடித்தல் நடந்தது. 10-ம் நாள் திருவிழாவான நேற்று தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக சுவாமி அம்பாள் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்