பாலமேடு அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
பாலமேடு அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66.எம்.பள்ளபட்டி கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி வடமஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகளும் 100-க்கும் மேற்பட்டமாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு காளைக்கு 9 வீரர்கள் வீதம் 25 நிமிடங்கள் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 12 சுற்றுகளாக 12 காளைகள் மைதானத்தில் இறங்கியது. இதில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் அண்டா, கட்டில், குத்து விளக்கு, ரொக்க பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாடு முட்டியதில் 17 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர். இந்த போட்டியை காண சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் வந்து இருந்தனர்.