கல்வி மாவட்டங்களில் வடலூர் முதலிடம்
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கடலூர் கல்வி மாவட்டங்களில் வடலூர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.;
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், வடலூர் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 கல்வி மாவட்டங்களிலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி விகிதத்தில் வடலூர் கல்வி மாவட்டம் 94.45 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வருமாறு:- விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 6,431 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 5812 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 90.37 சதவீதம் ஆகும். கடலூர் கல்வி மாவட்டத்தில் 10,200 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9,509 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 93.23 சதவீத தேர்ச்சியாகும். சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 6,347 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 5,893 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 92.85 சதவீதம் ஆகும். வடலூர் கல்வி மாவட்டத்தில் 6,957 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 6,571 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 94.45 சதவீதம் ஆகும்.