காரிமங்கலம்:
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் காரிமங்கலம் கால்நடை ஆஸ்பத்திரியில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மண்டல இணை இயக்குனர் டாக்டர் சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கால்நடை டாக்டர்கள் ஆசைதம்பி, நடராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பூசி குறித்தும், செல்லப்பிராணிகளை பராமரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.