நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 30,380 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் 30,380 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 13,67,543 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 11,01,379 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 34 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 10,27,291 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். நேற்று 35-ம் கட்டமாக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1,263 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள் உள்பட ஏராளமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 30,380 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.