கரூரில், நாய்களுக்கு தடுப்பூசி

கரூரில், நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

Update: 2022-09-28 18:48 GMT

வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ந்தேதி உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக வெறி நோய் தடுப்பு தினமான நேற்று தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கரூர் தெரசாகார்னரில் அமைந்துள்ள கால்நடை பெரு மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசுகையில், கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை குறைந்த பட்சம் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 72 இடங்களில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தும் நாய்களுக்கு அந்த ரேபிஸ் வைரஸ் தாக்காத வகையில் பாதுகாத்து கொள்ளலாம். ஒரு முறை செலுத்தப்படும் இந்த தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது என்றார். மேலும் முகாமிற்கு பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (கூடுதல்) முரளிதரன், துணை இயக்குனர் சரவணகுமார், பிரதம திட்டம் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்