செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

ராமேசுவரத்தில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2023-01-07 18:38 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் லெட்சுமண தீர்த்தம் அருகில் செல்ல பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், ஆணையாளர் கண்ணன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் வீடுகளில் வளர்க்கப்படும் 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் தேவகி, ரடாப்னி, கால்நடை ஆய்வாளர் ஜோசி தங்கராணி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சீனிவாசன், கல்யாணி, ஜானகி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கால்நடை நல விழிப்புணர்வு முகாம் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியை தலைமை தாங்கினார். வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்