ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

கோவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது

Update: 2022-06-02 15:06 GMT

கோவை

கோவை, திருப்பூர், நீலகிரியில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு சிறப்பு தடுப்பூசி போடப்படுவது வழக்கம். அதன்படி இந்த 3 மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு நோய் எதிர்ப்பு தடுப்பூசி போடும் முகாம் கோவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஹஜ் யாத்திரை செல்லும் 177 பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அனைத்து ஜமா அத் செயலாளர் முகமது அலி, சிறுபான்மை பிரிவை சேர்ந்த அப்துல்ரகுமான் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவையை சேர்ந்த 90 பேர், நீலகிரியை சேர்ந்த 36 பேர், திருப்பூரை சேர்ந்த 51 பேர் என மொத்தம் 177 பேர் கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது என்றனர்.

மேலும் செய்திகள்