கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான புருல்லோசிஸ் நோய் தடுப்பு ஊசி முகாம் ஜூலை 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் கிராம பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. காளை கன்றுகளுக்கும், சினைப் பசுக்களுக்கும் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.