விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு விழா

விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு விழா

Update: 2023-05-14 19:15 GMT

குன்னூர்

 குன்னூர் வெஸ்லி ஆலய சேகரத்துக்்கு உட்பட்ட நல்லப்பன் தெரு ஜோசப் ஆலயத்தில் 'வந்து பாருங்கள்' என்ற தலைப்பில் விடுமுறை வேதாகம பள்ளி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. வகுப்பில் வேதாகம பயிற்சி, பாடல், நடனம் போன்றவைகள் கற்று கொடுக்கப்பட்டன. இதை ஜான் பீட்டர் மற்றும் ஞானம் ஜேம்ஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து வேதாகம பள்ளியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு குன்னூர் வெஸ்லி ஆலய போதகர் ரோட்ரிக்ஸ்பர்னபாஸ் தலைமை தாங்கினார். விழாவில் குழந்தைகளின் வேத அறிவு போட்டி, பாடல், நடனம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பெண்கள் ஐக்கிய சங்க பிரதிநிதி ஸ்டெல்லா ரவி ஆனந்தராஜ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை போதக சேகர குழு உறுப்பினர் விமலாஅன்பு செல்வி தலைமையில் சபை மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்