காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
குன்னூர்
தென் பிராந்திய ராணுவ பொறியாளர் மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்சில் நடைபெற்றது. சங்க தலைவர் மன்மோகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் திருமலை, அகில இந்திய பாதுகாப்பு தொழிலாளர் சம்மேளன தலைவர் பதக், பொது செயலாளர் ஹர்பஜன் சிங், இணை செயலாளர் ஆர்.எஸ்.ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உரிய நேரத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ராணுவ பொறியாளர் பிரிவில் மீதமுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மலைப்பிரதேசமாக நீலகிரியில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்களுக்கு படி வழங்க வேண்டும், ராணுவ பொறியியல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும், மத்திய அரசு ஒப்பந்ததாரர்களை ஊக்குவித்து அவர்களின் பணிகளை நிரந்தர பணியாளர்களை கொண்டு செய்து வருவதை கண்டிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ெபாறியியல் பிரிவு துணை தலைவர் செல்வம், துணை பொது செயலாளர் ஸ்ரீ தர், துர்கா தேவி, இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், அமைப்பு செயலாளர் சரவணகுமார் மற்றும் வெலிங்டன் கிளை தலைவர்கள் திருப்பதி பாண்டி, ரவிக்குமார், செயலாளர்கள் விமல், பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.