காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

பட்டு வளச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊழியர் சங்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-06-11 13:57 GMT

வாணியம்பாடி பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்க 40-வது அமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மல்பெரி நடவு மானியம், புழு வளர்ப்பு மனை மானியம், மத்திய திட்டங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கிட வேண்டும். உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து நிலை பதவிகளுக்கும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்