காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நாகையில் நடந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-07 18:45 GMT


தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நாகையில் நடந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாக்டோ- ஜியோ ஆலோசனைக்கூட்டம்

நாகையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராணி, அந்துவன் சேரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தினக்கூலியில் பணி புரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புறநூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

எம்.எல்.ஏ.விடம் வேண்டுகோள்

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், தனியார் மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை, நாகை மாலி எம்.எல்.ஏ.விடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வழங்கி, கோரிக்கைக்கு தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்